சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தினம் – பிப்ரவரி 15
February 17 , 2022 1281 days 515 0
இத்தினமானது குழந்தைப் பருவ புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தச் செய்யவும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை தெரிவிப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் ஒரு உலகளாவியப் பிரச்சாரமாகும்.
இந்த வருடாந்திர நிகழ்வானது 2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
சர்வதேச குழந்தைப்பருவத் தொற்றுநோய் அமைப்பு, புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கான சங்கங்கள், குழந்தைப் பருவ புற்றுநோய்க்கு ஆதரவு வழங்கும் குழுமங்கள் மற்றும் புற்றுநோய்ச் சமூகங்களால் இத்தினமானது உருவாக்கப்பட்டது.