சர்வதேச சிறார் பாலியல் சுரண்டல் தொடர்பான முன்னெடுப்பு
July 13 , 2022 1156 days 556 0
சர்வதேசக் காவல்துறையின் சர்வதேச சிறார் பாலியல் சுரண்டல் (ICSE) தொடர்பான முன்னெடுப்பில் இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு இணைந்துள்ளது.
இதன் மூலம், அதன் படங்கள் மற்றும் ஒளிப்படக் காட்சிகள் ஆகியவற்றின் தரவுத் தளத்திற்கான அணுகலைப் இது பெற்றது.
சர்வதேச சிறார் பாலியல் சுரண்டல் தொடர்பான முன்னெடுப்பின் படம் மற்றும் ஒளிப் படக் காட்சிகள் தரவுத்தளம் ஆனது ஒரு நுண்ணறிவு மற்றும் புலனாய்வுக் கருவி ஆகும்.
இது சிறப்புப் புலனாய்வாளர்களை சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பற்றிய தரவைப் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்கிறது.
இது சிறார் பாலியல் சுரண்டல் ஆதாரங்களைப் பகுப்பாய்வு செய்வதோடு, பாதிக்கப் பட்டவர்கள், துஷ்பிரயோகம் செய்பவர்கள் மற்றும் நடந்த இடம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்புகளை ஏற்படுத்துகிறது.
இந்த தரவுத்தளத்தையும் மென்பொருளையும் அணுகுவதற்கு வாய்ப்பு பெற்ற 68வது நாடு இந்தியாவாகும்.
சர்வதேச சிறார் பாலியல் சுரண்டல் தொடர்பான முன்னெடுப்பின் தரவுத்தளம் ஆனது உலகளவில் சராசரியாக தினமும் 7 பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காண உதவுகிறது.