சர்வதேச சிவிங்கிப் புலிகள் தினம் 2023 – டிசம்பர் 04
December 6 , 2023 747 days 305 0
சிவிங்கிப் புலிகள் ஆனது, பூமியின் வேகமான நிலவாழ் விலங்குகள் மற்றும் பாலூட்டி இனம் எனப் புகழப்படுகிறது.
வனங்களில் 7,000 சிவிங்கிப் புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளதையடுத்து சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) ஆனது, சிவிங்கிப் புலிகளை பாதிக்கப்படக் கூடிய இனமாக வகைப்படுத்துகிறது.
இந்த தேதியானது, அமெரிக்காவின் டாக்டர் லாரி மார்க்கரால் வளர்க்கப்பட்ட கயாம் என்ற சிவிங்கிப் புலியின் பிறந்தநாளாகும்.
கயாம் என்பது அமெரிக்காவின் ஓரிகான் என்ற மாகாணத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் மார்க்கரால் வளர்க்கப்பட்ட ஒரு சிவிங்கிப் புலிக் குட்டியாகும்.
1990 ஆம் ஆண்டில் சிவிங்கிப் புலிகள் பாதுகாப்பு நிதியம் (CCF) நிறுவப்பட்டதன் மூலம் சிவிங்கிப் புலிகளைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாடு சிறப்பிக்கப் படுகிறது.