சர்வதேச சூரிய ஒளி சக்தி கூட்டிணைவு ஒப்பந்தம் – டென்மார்க்
June 27 , 2021 1501 days 665 0
டென்மார்க் சர்வதேச சூரிய ஒளி சக்தி கூட்டிணைவு ஒப்பந்தம் மற்றும் இந்தியாவுடனான உறுதி ஏற்பு ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திட்டுள்ளது.
சர்வதேச சூரிய ஒளி சக்தி கூட்டிணைவு ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த பிறகு இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதலை வழங்கியுள்ள முதல் நாடு டென்மார்க் ஆகும்.
குறிப்பு
புதைபடிம எரிபொருட்கள் மீதான சார்பு நிலையைக் குறைப்பதற்கான முயற்சியில் சூரிய ஒளி சக்தியை திறம்படப் பயன்படுத்துவதற்கான ஒரு செயல்பாட்டை மேற்கொள்ளச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தமானது உருவாக்கப் பட்டது.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெம்ப்லே அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் ஆற்றிய உரையில் முதன்முதலாக இந்த முன்னெடுப்பினை அவர் முன்மொழிந்தார்.
மேலும் அவர் சூரிய ஒளியைப் பெறும் நாடுகளை ‘சூரியப் புத்திரர்’ எனவும் குறிப்பிட்டார்.