தாவர வளத்தினை/ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது பட்டினி நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், வறுமையைக் குறைப்பதற்கும், பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் எவ்வாறு உதவும் என்பது குறித்த ஒரு உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
உலகளாவிய உணவுப் பயிர்களில் சுமார் 40% ஆனது ஆண்டுதோறும் தாவரப் பூச்சிகள் மற்றும் நோய்களால் இழக்கப்படுகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் தாவர நோய்களால் சுமார் 220 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையும், ஊடுருவும் அயல் இனப் பூச்சிகளால் சுமார் 70 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையும் இழக்கப்படுகின்றது.
இந்தத் தினமானது சர்வதேச தாவர ஆரோக்கிய ஆண்டாக அறிவிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டின் முக்கிய மரபாகும்.