திமிங்கலப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (WTI) கடலோர கர்நாடகா, கேரளா மற்றும் லட்சத் தீவுப் பகுதிகளில் ‘Save the Whale Shark Campaign’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது.
திமிங்கலமானது (ரைன்கோடான் டைபஸ்) பூமியிலுள்ள மிகப்பெரிய மீன் ஆகும், மேலும் இது கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒரு முக்கிய இனமாகும்.
இந்தியாவில், திமிங்கலங்கள் முழு கடற்கரையோரத்திலும் காணப்படுகின்றன, இதில் மிகப்பெரிய கூட்டமைப்பு குஜராத் கடற்கரையில் காணப்படுகிறது.
இது இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மற்றும் 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I இன் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளது.