சர்வதேச தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான புதிய கட்டமைப்பு
December 14 , 2018 2443 days 764 0
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டோரஸ் “ஐ.நா. சர்வதேச தீவிரவாதத்திற்கெதிரான ஒருங்கிணைப்பு உடன்படிக்கை” என்ற பெயர் கொண்ட புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தினார்.
இந்தப் புதிய கட்டமைப்பின் நோக்கங்கள் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் அமைதி, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் ஆகிய பணிகளை மேற்கொள்வதை ஒருங்கிணைப்பது ஆகியனவாகும்.
இது ஐ.நா. பொதுச் செயலாளர், 36 நிறுவனங்கள், பன்னாட்டுக் காவல் படை மற்றும் உலக சுங்க அமைப்பு (World Customs Organisation) ஆகியவற்றிற்கிடையேயான ஒரு ஒப்பந்தமாகும்.
இந்தக் கட்டமைப்பிற்கு ஐ.நா. தீவிரவாத எதிர்ப்பு அலுவலகமானது ஒருங்கிணைப்புக் குழுவாக செயல்படும். மேலும் இக்கட்டமைப்பின் பணிகளை இக்குழு மேற்பார்வையிடும்.