சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பின் உலகக் கோப்பை 2019
March 2 , 2019 2669 days 1019 0
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 முதல் 28 வரை புதுதில்லியில் ISSF உலகக் கோப்பை நடத்தப்பட்டது.
இது ISSF உலகக் கோப்பையின் வருடாந்திர நிகழ்வாகும். இது சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பால் (ISSF – International Shooting Sport Federation) நடத்தப்படுகின்றது.
இது ஜப்பானின் டோக்கியோ நகரில் நடத்தப்பட இருக்கும் 2020 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிப் போட்டியாகும்.
இந்த உலகக் கோப்பையில் ஹங்கேரியுடன் இணைந்து இந்தியா முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
கலப்பு அணிப் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சௌரப் சௌத்ரியும் மனு பேக்கரும் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
அபூர்வா சந்தேலா பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் வென்றதோடு, 2019 ஆம் ஆண்டின் துப்பாக்கிச் சுடும் விளையாட்டிற்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று உலக சாதனையைப் படைத்துள்ளார்.