சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வெளிப்புறத் தணிக்கையாளர்
February 28 , 2023 962 days 488 0
ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வெளிப்புறத் தணிக்கையாளராக இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் கிரீஷ் சந்திர முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் 2024 முதல் 2027 ஆம் ஆண்டு வரையில் நான்கு ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார்.
இது சர்வதேசச் சமூகம் மற்றும் அதன் தொழில்முறை, உயர் தரநிலை, உலகளாவியத் தணிக்கை நடைமுறைகள் மற்றும் வலுவான தேசிய நன்மதிப்புகள் ஆகியவற்றின் மத்தியில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கான ஒரு அங்கீகாரமாகும்.
பிலிப்பைன்ஸின் உயர்நிலை தணிக்கை நிறுவனத்திடமிருந்து சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தற்போதைய வெளிப்புறத் தணிக்கையாளர் பொறுப்பினை இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ஏற்க உள்ளார்.