நாடுகளுக்கு இடையே அமைதியான உறவுகள், அரசுமுறை உறவுகள் மற்றும் மோதல் தடுப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் (UNGA) 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
இந்த நாள் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி முதல் நிரந்தரமாக நடுநிலை வகிக்கும் நாடான துர்க்மெனிஸ்தானால் முன்மொழியப்பட்ட UNGA தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டது.
நடுநிலை என்பது ஒரு நாடு ஆனது போர்களில் எந்தவொரு நாட்டிற்கும் பக்கபலமாக இருக்காமல், மோதல்களில் பாரபட்சமற்றதாக இருப்பதாகும்.