2026 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று சர்வதேச நட்பு தினம் அனுசரிக்கப்பட்டது, அதே நேரத்தில் இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று (ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமை) நட்பு தினம் கொண்டாடப்பட்டது.
மக்களுக்கும் நாடுகளுக்கும் இடையே நட்பு, அமைதி மற்றும் புரிதலை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை (UN) 2011 ஆம் ஆண்டில் ஜூலை 30 ஆம் தேதியை சர்வதேச நட்பு தினமாக அறிவித்தது.
இந்தியாவில் பாரம்பரியமாக ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது, இந்த நடைமுறை பல ஆண்டுகளாகப் பின்பற்றப் பட்டு வருகிறது.
உலகளாவிய நட்பு தினம் என்ற யோசனை முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் பராகுவேயின் டாக்டர் ராமன் ஆர்டெமியோ பிராச்சோ என்பவரால் முன்மொழியப் பட்டு, உலக நட்புப் படைப்பிரிவுக்கு வழிவகுத்தது.
சமூகங்கள் மற்றும் நாடுகள் முழுவதும் நட்பை வலுப்படுத்தவும், கருணையை மேம்படுத்தவும் மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கவும் இந்த நாள் மக்களை ஊக்குவிக்கிறது.