சர்வதேச நதிகள் பாதுகாப்பு செயல்பாட்டுத் தினம் 2026 – மார்ச் 14
March 19 , 2026 178 days 264 0
சுத்தமான நீர், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் மனித வாழ்விற்காக நதிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இத்தினம் வலியுறுத்துகிறது.
1997 ஆம் ஆண்டில் பிரேசிலின் குரிடிபாவில் நடைபெற்ற சர்வதேசக் கூட்டத்தில் இத்தினம் முதன்முதலில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
நதிகளின் சுதந்திரமான ஓட்டத்தைப் பாதுகாத்தல், நீரின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்தல் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாசுபாடு, அணைகள் மற்றும் நதிகளில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை இது ஏற்படுத்துகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Protect Rivers, Protect People” என்பதாகும்.