இந்த மசோதாவானது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது.
இந்த மசோதாவானது இந்தியாவில் உள்ள சர்வதேச நிதிச் சேவை மையங்களில் (International Financial Services Centres - IFSCs) நிதிச்சேவை சந்தையை மேம்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு ஆணையத்தை நிறுவுவதற்கு வழிவகை செய்கின்றது.
இந்த மசோதாவானது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005ன் கீழ் அமைக்கப்பட்ட அனைத்து IFSCsகளுக்கும் பொருந்தும்.
இந்த ஆணையத்திற்கு ஒன்பது உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்க இருக்கின்றது.
இந்த ஆணையத்தில் உள்ள உறுப்பினர்களின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளாகும். இந்த உறுப்பினர்களை மீண்டும் அப்பதவிக்கே மறுநியமனம் செய்யலாம்.
இந்த மசோதாவின் படி, அந்தந்த நிதித் துறை ஒழுங்குமுறை ஆணையங்கள் (அதாவது இந்திய ரிசர்வ வங்கி, இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம், இந்தியக் காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமைமற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் போன்றவை) பயன்படுத்தக் கூடிய அனைத்து அதிகாரங்களும் இந்த ஆணையத்தினால் மட்டுமே செயல்படுத்தப்பட இருக்கின்றன.
இந்தியாவில் முதலாவது IFSCs ஆனது குஜராத்தின் காந்திநகரில் உள்ள கிஃப்ட் நகரில் அமைக்கப் பட்டுள்ளது.