சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் தினம் / உலகப் பாரம்பரியத் தினம் – ஏப்ரல் 18
April 20 , 2023 830 days 280 0
சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் சபையானது (ICOMOS), 1982 ஆம் ஆண்டில் இந்த நாளைக் கொண்டாடுவதற்கான ஒரு முடிவினை மேற்கொண்டது.
இது உலகப் பாரம்பரிய தினம் என்று பிரபலமாக அறியப் படுகிறது.
1983 ஆம் ஆண்டில் நடைபெற்ற UNESCO அமைப்பின் 22வது பொது மாநாட்டின் போது இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்தத் தினமானது உலகின் கலாச்சாரம் மற்றும் இயற்கைப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவது மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்காக இந்த விலை மதிப்பற்ற அரும் பெரும் தளங்களை வளங்காத்து அதனைப் பாதுகாப்பது போன்றவற்றின் ஒரு பெரும் முக்கியத்துவம் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பாரம்பரிய மாற்றங்கள்” என்பதாகும்.