1998 ஆம் ஆண்டில் ரோம் சட்டத்தை ஏற்றதன் பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வினையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (‘ICC’) நிறுவப்பட்டதையும் நினைவு கூரும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகளாவியச் சமூகத்திற்கு ஆபத்தினை ஏற்படுத்துகின்ற மிகக் கடுமையான குற்றங்களை இழைக்கும் நபர்களைத் தண்டிக்க ICC உருவாக்கப்பட்டது.
இத்தினமானது, உலகளாவிய அளவில் பொறுப்புணர்வை ஊக்குவிக்கிறது, பாதிக்கப் பட்டவர்களை சிறப்பிக்கிறது மற்றும் நீதியைப் பெறுவதில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
தற்போது 125 நாடுகள் இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின் உறுப்பினர் நாடுகளாக உள்ளன.
உக்ரைன் நாடானது 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று ICC அமைப்பின் 125வது உறுப்பினர் நாடாக இணைந்தது.