சர்வதேச நெகிழிப் பை பயன்பாடு இல்லாத தினம் - ஜூலை 03
July 6 , 2024 313 days 203 0
இது ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளை ஒழிப்பதற்கும் அதற்கான நிலையான மாற்றுகளை மேம்படுத்துவதற்குமான ஒரு தினமாகும்.
ஜீரோ வேஸ்ட் ஐரோப்பா (ZWE) என்ற அமைப்பின் உறுப்பினரான ரெஷேரோ, 2008 ஆம் ஆண்டில் இந்த நாளைத் தொடங்கினார்.
நெகிழிப் பைகள் புதுப்பிக்க இயலாத புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தயாரிக்கப் படுகின்றன என்ற நிலையில் அவற்றின் உற்பத்தி மற்றும் அகற்றலின் போது வளக் குறைப்பு மற்றும் பசுமை இல்ல` வாயு வெளியேற்றத்திற்குப் பங்களிக்கின்றன.
தனிநபர்கள் மற்றும் அரசுகள் இந்தத் தாக்கத்தினை உணர்ந்து நெகிழிப் பயன்பாடு மற்றும் மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருமளவில் வலியுறுத்துவதே இதன் நோக்கமாகும்.