புலிகள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளாவிய காட்டுப் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான Tx2 இலக்கை இந்தியா உட்பட 13 புலிகள் வாழும் நாடுகள் தொடங்கிய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் உச்சிமாநாட்டில் (ரஷ்யா) 2010 ஆம் ஆண்டில் இந்த தினம் நிறுவப் பட்டது.
புலிகள் வேட்டையாடும் விலங்குகளில் முதன்மையாக உள்ளன மற்றும் ஆரோக்கியமான வனச் சூழலமைப்புகளைப் பராமரிக்க உதவும் ஒரு முக்கிய இனமாகும்; சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) இவற்றை அருகி வரும் இனமாகப் பட்டியலிட்டுள்ளது.
உலகில் உள்ள காட்டுப் புலிகளில் சுமார் 75% புலிகள் இந்தியாவில் உள்ளன. மேலும் புலிகளைப் பாதுகாக்கவும் வேட்டையாடுவதைக் கட்டுப்படுத்தவும் 1973 ஆம் ஆண்டில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை' இந்தியா தொடங்கியது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Securing the Future of Tigers with Indigenous Peoples and Local Communities at the Heart" என்பதாகும்.