சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம் 2026 - பிப்ரவரி 06
February 9 , 2026 141 days 214 0
2012 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு, இந்த சர்வதேச தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
"பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற நிலை" என்ற கருத்து முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான குழுவால் (IAC) அறிமுகப்படுத்தப்பட்டது.
பெண் பிறப்புறுப்பு சிதைப்பை (FGM) ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலகளாவிய முயற்சிகளை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
நீடித்த வளர்ச்சி இலக்குகளின் (SDG) இலக்கு 2030 ஆம் ஆண்டிற்குள் பெண் பிறப்புறுப்பு சிதைப்பை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Towards 2030: No End To FGM Without Sustained Commitment and Investment” என்பதாகும்.