சர்வதேச பெரும் பூனை இனங்களின் கூட்டணி (IBCA) உச்சிமாநாடு 2026
May 16 , 2026 87 days 185 0
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது சர்வதேச பெரும் பூனை இனங்களின் கூட்டணி (IBCA) உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் முத்திரைச் சின்னத்தை புது தில்லியில் வெளியிட்டார்.
IBCA அமைப்பானது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று உலகளாவிய பெரும் பூனை இனப் பாதுகாப்பிற்கான ஒரு அரசுகளுக்கிடையேயான கூட்டணியாகத் தொடங்கப் பட்டது.
IBCA செயலகம் இந்தியாவின் புது தில்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது 95 பெரும் பூனை இனங்கள் வாழும் நாடுகளை இணைக்கிறது.
இந்தக் கூட்டணியானது புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, சிவிங்கிப்புலி, ஜாகுவார் மற்றும் பூமா ஆகிய ஏழு பெரிய பூனை இனங்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது.
IBCA எல்லை தாண்டிய ஒத்துழைப்பு, அறிவியல் ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு நிதியுதவி ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான உச்சி மாநாடானது பெரும் பூனை இனங்கள் பாதுகாப்பு குறித்த முதல் உலகளாவியப் பிரகடனத்தை ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.