சர்வதேச பொது விமானப் போக்குவரத்து தினம் - டிசம்பர் 07
December 11 , 2022 1115 days 507 0
சர்வதேச விமானப் போக்குவரத்தில் சர்வதேச பொது விமான நிறுவனங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
சர்வதேச விமானப் போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புத் தரநிலைகள் சர்வதேச பொதுப் போக்குவரத்து அமைப்பு எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் தன்னாட்சி அமைப்பினால் மேலாண்மை செய்யப்படுகிறது.
இந்தத் தினமானது முதன்முதலில் 1994 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டதோடு, 1996 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "உலகளாவிய விமானப் போக்குவரத்து மேம்பாட்டிற்கான புதுமைகளை மேம்படுத்துதல்" என்பதாகும்.
2023 ஆம் ஆண்டு வரை இந்தக் கருத்துரு பின்பற்றப்படும்.