சர்வதேச மகளிர் தொழில் முனைவோருக்கான உச்சிமாநாடு 2018
September 6 , 2018 2543 days 813 0
2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தொழில் முனைவோர் உச்சிமாநாடானது நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வானது தெற்காசியப் பெண்கள் மேம்பாட்டு மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “சமத்துவமானது பொருளாதார மேம்பாட்டுடன் தொடங்குகிறது” என்பதே இந்த மூன்று நாள் நிகழ்வின் மையக்கருவாகும்.
கலந்துரையாடல்கள் மற்றும் இணைந்து செயல்படுதல் மூலமாக புத்தாக்க பொருளாதார மாற்றத்தை மையமாக கொண்டு சாதனையாளர்கள், பெண் வணிகத் தலைவர்கள், தொழில்சார்நபர்கள், சர்வதேச சேவை வழங்குநர்கள், வள நிறுவனங்கள், வல்லுனர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் போன்றோர்களை ஒன்றாக கொண்டு வருவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.