2021 ஆம் ஆண்டில் மிக மோசமான மதச் சுதந்திர மீறல்கள் காரணமாக குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகளின் ஒரு பட்டியலில் இந்தியாவைச் சேர்ப்பதற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவுடன் சேர்த்து, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சிரியா மற்றும் வியட்நாம் ஆகியவை குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட பரிந்துரைக்கப்பட்ட நாடுகள் ஆகும்.
மியான்மர், சீனா, எரித்ரியா, ஈரான், வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவை இந்தப் பட்டியலில் இருந்து விலக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட நாடுகள் ஆகும்.