சர்வதேச மத்தியதரைக் கடல் உணவு முறை தினம் 2026 - நவம்பர் 16
November 18 , 2026 2 days 80 0
ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், நிலையான உணவு அமைப்புகள் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதலாவது சர்வதேச மத்தியதரைக் கடல் உணவு முறை தினம் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று அனுசரிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Science, Sustainability, and Cultural Heritage” என்பதாகும்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) இத்தினத்தை அறிவித்தது.
மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் தோன்றிய மத்தியதரைக் கடல் உணவு முறையில் முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை அடங்கும்.
2010 ஆம் ஆண்டில் மத்தியதரைக் கடல் உணவு முறையை மனிதகுலத்தின் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது.