இத்தினமானது கடந்த காலச் சாதனைகள் மற்றும் பேரண்டத்தினை ஆராய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் ஆகிய இரண்டையும் நன்கு போற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதியன்று, சோவியத் ஒன்றிய விண்வெளி வீரர் யூரி ககாரின், வோஸ்டாக் 1 ஏவுகலத்தில் விண்வெளிக்குப் பயணித்த முதல் மனிதர் என்ற வரலாற்றைப் படைத்தார்.
இந்த சிறப்புமிக்க நிகழ்வை அங்கீகரிப்பதற்காக 2011 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையானது இந்த நாளை அறிவித்தது.
பொதுவாக, கர்மன் கோடு ஆனது கடல் மட்டத்திலிருந்து 100 கிலோ மீட்டர் (62 மைல்) உயரத்தில் அமைந்துள்ளது.
இது புவியின் வளிமண்டலத்தினை விண்வெளியில் இருந்து பிரித்து வரையறுக்கும் ஒரு கற்பனைக் கோடாகும்.
கர்மன் கோட்டிற்கு மேலே பயணிக்கும் எந்தவொருக் கட்டமைப்பிற்கும் புவியின் வளி மண்டலத்தினால் உருவாக்கப்படும் உந்து விசையினைச் சார்ந்திருக்காத உந்துவிசை அமைப்பு தேவைப்படுகிறது.