சர்வதேச ராஜ்ஜிய உறவு (இராஜதந்திரம்) அதிகாரிகள் தினம் – 24 அக்டோபர்
October 27 , 2021 1308 days 416 0
பண்டைய காலத்திலிருந்தே உலகை வடிவமைப்பதிலும் நமது புவியைச் சிறந்த இடமாக மாற்றுவதிலும் ராஜ்ஜிய உறவு அதிகாரிகள் ஆற்றி வரும் பங்களிப்பிற்குக் கௌரவமளிக்கும் வகையில் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
பொது மக்களிடையே ராஜ்ஜிய உறவு அதிகாரிகளின் வாழ்க்கை முறை பற்றி நிலவும் கருத்து மற்றும் யதார்த்தம் குறித்த வேறுபாடுகளைப் பூர்த்தி செய்வதையும் இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தினமானது முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் அக்டோபர் 24 அன்று பிரேசிலியாவில் (பிரேசில் தலைநகரம்) அனுசரிக்கப் பட்டது.
இத்தினமானது K. அபே எனப்படும் ஒரு இந்தியக் கவிஞர் மற்றும் ராஜ்ஜிய உறவு அதிகாரியினால் முன்மொழியப் பட்டது.