சர்வதேச ரைபெய்சென் தொழிற்சங்கத்தின் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது இந்திய பெண்
October 10 , 2018 2416 days 862 0
ஜெர்மனியின் சர்வதேச ரைபெய்சென் தொழிற்சங்கத்தின் (IRU - International Raiffeisen Union) மன்றத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் நந்தினி ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இம்மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது இந்தியப் பெண்மணி இவராவார்.
இவர் இந்தியப் பெண்கள் கூட்டுறவு அமைப்பின் (ICNW - Indian Co-operative Network for Women) தலைவர் ஆவார்.
IRU என்பது உலகின் பழமையான கூட்டுறவு தொழிற்சங்கமாகும். மேலும் இது தேசிய கூட்டுறவு அமைப்புகளின் உலகளாவிய தன்னார்வ சங்கமாகும்.
டாக்டர் ஆசாத் தலைமையிலான இந்தியப் பெண்கள் கூட்டுறவு அமைப்பானது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களின் கூட்டுறவு அமைப்பாகும்.