சர்வதேச வான்வழிப் போக்குவரத்து தினம் – டிசம்பர் 07
December 8 , 2021 1398 days 616 0
உலகின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் வான்வழிப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தினை அங்கீகரிப்பதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
தற்போது முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் இத்தினத்தின் கருத்துருவாக “உலக வான்வழிப் போக்குவரத்து மேம்பாட்டிற்கான புதுமையை மேம்படுத்துதல்” (Advancing Innovation for Global Aviation Development) என்பது பின்பற்றப்படும் என முடிவு செய்யப் பட்டுள்ளது.
சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சபை நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவு தினத்தினைக் கொண்டாடுவதற்காக 1994 ஆம் ஆண்டில் இத்தினமானது தொடங்கப் பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1996 ஆம் ஆண்டில் இத்தினத்தினை அறிவிக்கச் செய்தது.