சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க WADA தடை
December 12 , 2019 2200 days 881 0
உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் (World Anti-Doping Agency - WADA) செயற்குழுவானது ரஷ்யாவை அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஒலிம்பிக் போட்டி (2020 - டோக்கியோ & 2022 - பெய்ஜிங்) மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது.
WADA அமைப்பானது 2015 ஆம் ஆண்டு ரஷ்யத் தடகளப் போட்டியில் அதிக அளவிலான ஊக்க மருந்து உட்கொண்டதற்கான ஆதாரங்களை முதன்முதலில் கண்டறிந்தது.
ஆனாலும் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் தங்கள் நாட்டின் கொடி அல்லது கீதம் இல்லாமல் முக்கியமான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிடலாம்.