சர்வதேச வெண்தோல் நோய் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13
June 15 , 2023 798 days 332 0
இந்தத் தினமானது உலகம் முழுவதும் வெண்தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பச் செய்வதோடு அவர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிப்பதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது.
அல்பினிசம் (வெண்தோல் நோய்) என்பது ஒரு அரிதான மற்றும் மரபணு ரீதியாக மரபு வழியாகப் பெறப்பட்ட பாதிப்பு நிலையாகும் என்பதோடு, இந்த நோயினால் பாதிக்கப் படுபவரின் தோல், முடி மற்றும் கண்களில் சிறிதளவு அல்லது நிறமி (மெலனின்) இழப்பு ஏற்படுகிறது.
இது சூரியன் மற்றும் பிரகாசமான ஒளி ஆகியவற்றினால் பாதிப்புக்குள்ளாகும் ஒரு தன்மையினை ஏற்படுத்துகிறது.
இது ஒரு தொற்றாத நோய் நிலையாகும், என்றாலும் அல்பினிசம் பாதிப்பு உள்ளவர்கள் பார்வைக் குறைபாடுடையவர்களாகவும், தோல் புற்றுநோய்க்கு உள்ளாகும் ஒரு பெரும் வாய்ப்பினைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
2013 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையமானது, "அல்பினிசம் பாதிப்பு உள்ள நபர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாகுபாடு" என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உள்ளடக்கமே வலிமை" என்பதாகும்.