சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமீரகம் – மதிப்புக் கூட்டப்பட்ட வரி
January 1 , 2018 2788 days 1009 0
சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமீரகமும் முதல் முறையாக மதிப்புக் கூட்டப்பட்ட வரியை (VAT-Value Added Tax) அறிமுகம் செய்திருக்கின்றன.
இது வருவாயை ஊக்குவிக்கும் விதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஐந்து சதவிகித வரியாகும்.
மருத்துவ சிகிச்சை, நிதிச்சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற சில சேவைகளுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அல்லது பூஜ்ஜிய வரி மதிப்பீடு (zero-tax rating) அளிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு குழுவின் (Gulf Cooperation Council) மற்ற நாடுகளான பக்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகியவையும் இந்த வரியை அறிமுகம் செய்வதற்கு முடிவெடுத்துள்ளன.
இதில் முக்கியமான குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் எந்தவொரு வளைகுடா நாடுகளும் எந்த விதமான தனிப்பட்ட வருமான வரியையும் விதிப்பதில்லை.