சவுதி அரேபியா நாட்டில் கொலைகள் முதல் தீவிரவாதக் குழுக்களைச் சேர்த்தல் வரையிலான குற்றங்களில் ஈடுபட்ட 81 குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை விதிக்கப் பட்டது.
இந்த நாட்டின் நவீனகால வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய மரணத் தண்டனை இதுவாகும்.
இது 1979 ஆம் ஆண்டில் மெக்காவிலுள்ள மிகப்பெரிய மசூதியைக் கைப்பற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட 63 தீவிரவாதிகளுக்கு 1980 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரு எண்ணிக்கையையும் முந்தியது.