TNPSC Thervupettagam
December 20 , 2025 14 hrs 0 min 20 0
  • இந்திய அரசானது, கிராமப்புறக் கூட்டுறவு வங்கிகளை (RCBs) தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுடன் நவீனமயமாக்குவதற்காக என்று சஹாகர் சாரதி எனும் ஒரு பகிரப் பட்ட (ஒருங்கிணைந்த) சேவை நிறுவனத்தினைத் தொடங்கியது.
  • சஹாகர் சாரதி ஆனது இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதியன்று பதிவு செய்யப்பட்டது.
  • இது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD), தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் மற்றும் பங்கேற்கும் RCB ஆகியவற்றின் இடையே சமப் பங்குகளுடன் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான அங்கீகரிக்கப்பட்ட ஒரு மூலதனத்தைக் கொண்டுள்ளது.
  • இந்த நிறுவனம் மைய வங்கித் தீர்வுகள் (CBS), ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) மற்றும் ஆதாருடன் இயக்கப்பட்ட பண வழங்கீட்டு முறை (AePS) போன்ற டிஜிட்டல் கட்டணத் தளங்கள், இணையவெளிப் பாதுகாப்பு ஆதரவு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆளுகை ஆகியவற்றை வழங்குகிறது.
  • கிராமப்புறக் கூட்டுறவு வங்கிகளில் வாடிக்கையாளர் அணுகல், செயல்பாட்டுத் திறன் மற்றும் நவீன வங்கித் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதை மேம்படுத்துவதை சஹாகர் சாரதி நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்