சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் சஹ்பகீதா திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
பங்கேற்புப் பாதுகாப்பு மற்றும் ஈரநிலங்களைத் திறம்படப் பயன்படுத்துவதற்கு இது ஒரு முக்கியமான படியாகும்.
இந்த ஈரநிலங்களுடன் தொடர்பில் இருக்கும் சமூகங்களுக்குச் சமூக அளவிலான ஒரு உரிமை வழங்கும் அணுகுமுறையைச் செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
தற்போது, நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான தேசியத் திட்டம் (NPCA) என்ற மத்திய நிதியுதவித் திட்டத்தை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
NPCA என்ற திட்டத்தின் கீழ், 42 ராம்சார் தளங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 165 ஈர நிலங்களைப் பாதுகாப்பதற்கான மத்திய அரசின் உதவியை அந்த அமைச்சகம் அனுமதித்துள்ளது.