TNPSC Thervupettagam

சாகரோவ் பரிசு

October 24 , 2021 1367 days 632 0
  • சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) என்பவருக்குச் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயரிய மனித உரிமைகள் பரிசானது வழங்கப்பட்டது.
  • சிந்தனைச் சுதந்திரத்திற்கான சாகரோவ் பரிசானது பொதுவாக சாகரோவ் பரிசு என அழைக்கப்படுகிறது.
  • இது மனித உரிமைகள் மற்றும் சிந்தனைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவ விருதாகும்.
  • ரஷ்ய விஞ்ஞானியும் கொள்கை எதிர்ப்பாளருமான ஆன்ட்ரே சாகரோவ் என்பவரின் நினைவாக பெயரிடப்பட்ட இந்தப் பரிசானது 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியப்  பாராளுமன்றத்தினால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்