TNPSC Thervupettagam
March 19 , 2026 2 days 84 0
  • 24 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நினைவுக் குறிப்புகள் மற்றும் இலக்கிய விமர்சனம் போன்ற பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப் படுகிறது.
  • கவிதைப் பிரிவில் பிரசுன் பந்தோபாத்யாய் (வங்காளம் - 'ஷ்ரேஸ்தா கபிதா'), யோகேஷ் வைத்யா (குஜராத்தி - 'பத்த்கடாகி') மற்றும் நந்தினி சிதா ரெட்டி (தெலுங்கு - 'அனிமேஷா') ஆகியோர் விருது வென்றுள்ளனர்.
  • குறிப்பிடத்தக்க வெற்றியாளர்களில் நவ்ஜோத் சர்னா (ஆங்கில நாவல் - 'கிரிம்சன் ஸ்பிரிங்'), மம்தா காலியா (இந்தி நினைவுக் குறிப்பு - 'ஜீதே ஜீ அலகாபாத்') மற்றும் என். பிரபாகரன் (மலையாள நாவல் - 'மாயமனுஷ்யர்') ஆகியோர் அடங்குவர்.
  • தமிழ் மொழியில், தமிழ் சிறுகதைகளின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் 'தமிழ் சிறுகதையின் தடங்கள்' என்ற இலக்கிய விமர்சன நூலுக்காக ச. தமிழ்செல்வன் இவ்விருதை வென்றுள்ளார்.
  • இந்த விருது ஒரு செப்புப் பட்டயம், பொன்னாடை மற்றும் ₹1,00,000 ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்