சாகித்ய அகாதமி தனது வருடாந்திர சாகித்ய அகாதமி விருதுகளை 24 மொழிகளில் அறிவித்துள்ளது (8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகள் + ஆங்கிலம் + இராஜஸ்தானி).
7 கவிதை நூல்கள், 6 நாவல்கள், 6 சிறுகதைகள், 3 இலக்கிய விமர்சனங்கள் மற்றும் 2 கட்டுரைகள் ஆகியவை 2018 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருதுகளை வென்றுள்ளன.
தமிழ் எழுத்தாளர், பயணம் மேற்கொள்ளுபவர், கட்டுரையாளர் மற்றும் உரையாசிரியரான எஸ். இராமகிருஷ்ணன் தான் எழுதிய “சஞ்சாரம்” என்ற நாவலிற்காக 2018 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருதினை வென்றுள்ளார்.
சாகித்ய அகாடமியானது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும்.