March 25 , 2026
2 days
54
- இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI), மேம்பட்ட இனப்பெருக்க தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சாகிவால் கன்றுகளை உருவாக்கியுள்ளது.
- இந்த சாதனையை பரேலியின் (உத்தரப் பிரதேசம்) இசாத்நகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை-இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நிகழ்த்தியுள்ளது.
- இந்த நிறுவனத்தில் முதல் முறையாக OPU-IVF-ET (அண்டம் எடுப்பு - வெளிச் சோதனை முறை கருத்தரித்தல் - கரு மாற்றம்) நுட்பத்தை அறிவியலாளர்கள் பயன்படுத்தினர்.
- 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஐந்து நாட்களுக்குள் ஐந்து ஆரோக்கியமான சாகிவால் இன கன்றுகள் பிறந்தன.
- சாகிவால், தார்பார்க்கர் மற்றும் முர்ரா எருமை போன்ற உள்நாட்டு இனங்களை மேம்படுத்துவதற்காக இந்தத் திட்டம் 2022-23 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Post Views:
54