சாகோஸ் தீவுகளை ஒப்படைப்பது குறித்த ஐக்கியப் பேரரசின் முடிவு
May 26 , 2025 88 days 116 0
முக்கியத்துவம் வாய்ந்த டியாகோ கார்சியா இராணுவத் தளம் அடங்கிய சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸுக்கு மாற்றும் ஒப்பந்தத்தில் ஐக்கியப் பேரரசு கையெழுத்திட்டது.
இந்தியப் பெருங்கடலில் ஐக்கியப் பேரரசு-அமெரிக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் டியாகோ கார்சியா இராணுவத் தளம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தத் தளமானது, தற்போது மொரீஷியஸிடமிருந்து 99 ஆண்டு கால அளவிலான ஒரு புதிய குத்தகையின் கீழ் குத்தகைக்கு விடப்படும்.
மொரீஷியஸுக்கு ஆண்டிற்குச் சராசரியாக 101 மில்லியன் பவுண்ட் (129 மில்லியன் டாலர்) வழங்கும்.
பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பாட்டின் இருந்த கடைசிப் பகுதிகளில் ஒன்றான சாகோஸ் தீவுகள் 1814 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் உள்ளன.
பிரிட்டன் ஆனது, மொரீஷியஸ் சுதந்திரம் பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 1965 ஆம் ஆண்டில் மொரீஷியஸிலிருந்து சாகோஸ் தீவுகளைப் பிரித்து, பின் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தினை உருவாக்கியது.
2019 ஆம் ஆண்டின் பிணைப்பு சாராத ஒரு கருத்தில், சர்வதேச நீதிமன்றம் ஆனது ஐக்கியப் பேரரசானது சட்ட விரோதமாக மொரீஷியஸைப் பிரித்ததாக தீர்ப்பளித்தது.