பூர்வீக மீன் இனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சிக்கிம் முதலமைச்சர் சாக்லேட் மஹசீர் மீன்களை ரங்கீத் ஆற்றில் விட்டார்.
தாமிர மஹசீர் என்றும் அழைக்கப்படும் சாக்லேட் மஹசீர் என்பது சிப்ரினிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நன்னீர் மீன் ஆகும்; இது மேகாலயாவில் உள்நாட்டில் 'காவ் சா' என்று அழைக்கப்படுகிறது.
இது மேகாலயா மற்றும் சிக்கிமின் மாநில மீன் ஆகும் என்பதோடு இது மேலும் வட கிழக்கு இந்தியா முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் மலை நீரோடைகளில் காணப் படுகிறது.
ரங்கீத் ஆறு தீஸ்தா நதியின் முக்கிய துணை நதியாகும்; இது இந்தியாவின் சிக்கிம் மற்றும் மேற்கு வங்காளம் வழியாகப் பாய்கிறது என்பதோடு இது சிக்கிமின் இமயமலைப் பகுதியில் உருவாகிறது.