TNPSC Thervupettagam

சாதிக் குற்ற வழக்கில் முன்னெச்சரிக்கை தடுப்புப் பிணை

September 23 , 2025 3 days 42 0
  • சாதிக் குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கை தடுப்புப் பிணையை இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
  • இந்த வழக்கில் 1989 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் அடங்கும்.
  • தேர்தல் தகராறுடன் தொடர்புடைய தாக்குதல், சாதி அடிப்படையிலான துஷ்பிரயோகம், கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
  • கூடுதல் அமர்வு நீதிமன்றம் மிகவும் மோசமான நோக்கம் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை தடுப்புப் பிணையை நிராகரித்தது.
  • பின்னர், இந்த வழக்கானது அரசியல் ரீதியாக முன் வைக்கப்பட்டதாகவும் மிகைப் படுத்தப் பட்டதாகவும் கூறி உயர் நீதிமன்றம் முன்னெச்சரிக்கை தடுப்புப் பிணை வழங்கியது.
  • இந்தச் சட்டத்தின் பிரிவு 18, முதல் நோக்கிலிடு வழக்கு தொடரப்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை தடுப்புப் பிணையைத் தடைசெய்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
  • முன்னெச்சரிக்கை தடுப்புப் பிணையை அனுமதிக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 438 வது பிரிவின் பொருந்தக்கூடிய தன்மையை 18 வது பிரிவு விலக்குகிறது.
  • பொது மக்களின் பார்வையில் நிகழும் தாக்குதல் மற்றும் சாதி அவமதிப்புகள் சட்டத்தின் குற்றங்களுக்கான வரையறையின் கீழ் வருகின்றன.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் உறுப்பினர்களுக்கு எதிராக வாக்களிப்பது தொடர்பான வற்புறுத்தல் அல்லது பழிவாங்கல் நடவடிக்கை ஆனது இந்தச் சட்டத்தின் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்படுகிறது.
  • உச்ச நீதிமன்றம் ஆனது உயர் நீதிமன்றத்தின் பிணை உத்தரவை வெளிப்படையான தவறு மற்றும் அதிகார வரம்புக்கு உட்பட்ட சட்டவிரோதம் என்று கூறியது.
  • இந்தச் சட்டத்தின் கீழ் எளிதில் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை தடுப்புப் பிணை மீதான தடையின் அரசியலமைப்பு செல்லுபடித் தன்மையை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்