சாதி அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு – ஆந்திரப் பிரதேசம்
November 2 , 2021 1427 days 689 0
2021 ஆம் ஆண்டிற்கான தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினரைக் குறிப்பிடுவதற்காக ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை ஒன்றை விடுக்க ஆந்திரப் பிரதேச அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் தெலங்கானா மாநில அரசும் இது போன்ற தீர்மானத்தினைத் தனது மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் நலனுக்கான ஒரு தனித் துறையை அமைக்கவும் ஆந்திரப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உயர்சாதியைச் சேர்ந்த ஏழை மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் இத்துறையானது உருவாக்கப்பட்டது.