April 8 , 2026
4 days
87
- சாத்தான்குளம் காவலில் நிகழ்ந்த மரண வழக்கில் ஒன்பது காவல்துறையினருக்கு மதுரை விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
- மத்தியப் புலனாய்வுத் துறையின் (CBI) விசாரணையில், ஒன்பது காவல்துறையினரும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது.
- குற்றவாளிகளுக்கு ₹1 கோடிக்கும் மேல் அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.
- சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன், இது கொலை என்பதற்கான முதற்கட்ட ஆதாரங்களையும் கண்டறிந்தது.
- இந்த வழக்கு "அரியவற்றில் அரியது" எனக் கருதப்பட்டு, அதிகபட்சத் தண்டனை வழங்கப் பட்டுள்ளது.
Post Views:
87