பீகார் மாநில அமைச்சரவையானது அந்த மாநிலத்தை மேம்படுத்துவதற்காக 2025–2030 ஆம் ஆண்டுகளுக்கான சாத் நிச்சய்-3 திட்டத்தை அங்கீகரித்தது.
இந்தத் திட்டம் வருமானம், வேலைவாய்ப்பு, தொழில், வேளாண்மை, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கையை எளிதாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இரட்டை வேலைவாய்ப்பு-இரட்டை வருமானம், வளமான தொழில்துறை அதிகாரம் பெற்ற பீகார், வேளாண்மையில் முன்னேற்றம், மேம்பட்ட கல்வி, அணுகக் கூடிய சுகாதாரம், வலுவான அடித்தளம் மிக்க நவீன விரிவாக்கம், அனைவருக்குமான கௌரவம் - வாழ்க்கையை எளிதாக்குதல் ஆகிய ஏழு முக்கியத் தீர்மானங்கள் முன் வைக்கப் பட்டன.
பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் சுயதொழில் செய்வதற்கு 10,000 ரூபாய் மற்றும் வணிக விரிவாக்கத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்குகிறது.
தொழில்துறை மேம்பாட்டில் 25 புதிய சர்க்கரை ஆலைகள் மற்றும் மூடப்பட்ட 9 சர்க்கரை ஆலைகளை மீண்டும் தொடங்குவது ஆகியவை அடங்கும் என்பதோடு மேலும் நகர்ப்புற மற்றும் கல்வி உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சுகாதார வசதிகளில் தொகுதி அளவிலான சிறப்பு மருத்துவமனைகள் மற்றும் கிராமப்புற மருத்துவர்களுக்கான சலுகைகள் அடங்கும் என்பதோடுகலாச்சார மற்றும் தடகளப் போட்டிகள் மேம்பாட்டிற்காக விளையாட்டு மற்றும் திரைப்பட நகரங்களும் இதில் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ் முந்தைய முன்னெடுப்புகளைச் சேர்ந்த மொத்தம் 430 திட்டங்கள் நிறைவு செய்யப்படும்.