சட்ட விவகாரத் துறையானது, 1952 ஆம் ஆண்டு சான்றுறுதி அலுவலர்/நோட்டரிகள் சட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டு சான்றுறுதி (திருத்தம்) விதிகளை அறிவித்துள்ளது.
இந்தத் திருத்தமானது, குஜராத், தமிழ்நாடு, இராஜஸ்தான் மற்றும் நாகாலாந்தில் அதிக பட்ச எண்ணிக்கையிலான சான்றுறுதி அலுவலர் எண்ணிக்கையை திருத்தி அமைக்கிறது.
குஜராத்திற்கான உச்ச வரம்பு 2,900லிருந்து 6,000 ஆகவும், தமிழ்நாட்டிற்கு 2,500லிருந்து 3,500 ஆகவும், இராஜஸ்தானுக்கு 2,000லிருந்து 3,000 ஆகவும், நாகாலாந்திற்கு 200 லிருந்து 400 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
ஒரு சான்றுறுதி அலுவலர் என்பவர் ஆவணங்களைச் சரிபார்த்து, அங்கீகரித்து மற்றும் சான்றளிப்பதற்காக, சாட்சி கையொப்பங்களை மேற்பார்வையிட மற்றும் உறுதி மொழிகளை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசு அதிகாரியாவார்.