சான் ஆண்ட்ரியாஸ் பிளவு: 1,000 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அழுத்தம்
June 22 , 2026 65 days 145 0
சான் ஆண்ட்ரியாஸ் பிளவு (அமெரிக்காவின் கலிபோர்னியா) கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிக அழுத்த அளவைக் குவித்துள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
நிலநடுக்க சுழற்சி மாதிரியாக்கத்தின் அடிப்படையில் அமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றிய (AGU) இதழ்களில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
புவியியல் மற்றும் கதிரியக்கக் கார்பன் தரவுகளைப் பயன்படுத்தி மறு கட்டமைக்கப் பட்ட 1,000 ஆண்டுகால பூகம்ப வரலாற்றை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்து உள்ளனர்.
பிளவு இழைத் தடங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் காஜோன் கணவாய் அருகே, பிளவுக்கு அடியில் அழுத்தம் உருவாகியிருப்பதை இந்த மாதிரி காட்டுகிறது.
அதிகரித்த அழுத்தம் என்பது உடனடி நிலநடுக்கத்தைக் குறிப்பதில்லை, மாறாக இது புவித் தட்டு சார்ந்த அழுத்தத்தின் நீண்டகாலக் குவிப்பையே குறிக்கிறது.
சான் ஆண்ட்ரியாஸ் பிளவு என்பது பசிபிக் தட்டு மற்றும் வட அமெரிக்கத் தட்டு ஆகியவை சந்திக்கும் ஒரு முக்கிய புவித்தட்டு சார்ந்த எல்லையாகும்.