TNPSC Thervupettagam

சான் ஆண்ட்ரியாஸ் பிளவு: 1,000 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அழுத்தம்

June 22 , 2026 15 days 91 0
  • சான் ஆண்ட்ரியாஸ் பிளவு (அமெரிக்காவின் கலிபோர்னியா) கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிக அழுத்த அளவைக் குவித்துள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
  • நிலநடுக்க சுழற்சி மாதிரியாக்கத்தின் அடிப்படையில் அமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றிய (AGU) இதழ்களில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
  • புவியியல் மற்றும் கதிரியக்கக் கார்பன் தரவுகளைப் பயன்படுத்தி மறு கட்டமைக்கப் பட்ட 1,000 ஆண்டுகால பூகம்ப வரலாற்றை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்து உள்ளனர்.
  • பிளவு இழைத் தடங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் காஜோன் கணவாய் அருகே, பிளவுக்கு அடியில் அழுத்தம் உருவாகியிருப்பதை இந்த மாதிரி காட்டுகிறது.
  • அதிகரித்த அழுத்தம் என்பது உடனடி நிலநடுக்கத்தைக் குறிப்பதில்லை, மாறாக இது புவித் தட்டு சார்ந்த அழுத்தத்தின் நீண்டகாலக் குவிப்பையே குறிக்கிறது.
  • சான் ஆண்ட்ரியாஸ் பிளவு என்பது பசிபிக் தட்டு மற்றும் வட அமெரிக்கத் தட்டு ஆகியவை சந்திக்கும் ஒரு முக்கிய புவித்தட்டு சார்ந்த எல்லையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்