சாபஹார் துறைமுகத்திற்கான அமெரிக்கத் தடைகள் விலக்கு
November 9 , 2025 12 days 58 0
ஈரானின் சாபஹார் துறைமுகத்தை இயக்குவதற்காக, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று அமெரிக்கா இந்தியாவிற்கு ஆறு மாத தடை விலக்கு அளித்தது.
இந்த விலக்கு ஆனது, பாகிஸ்தானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடனான வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியாவை அனுமதிக்கிறது.
ஓமன் வளைகுடாவில் உள்ள துறைமுகத்தை மேம்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் இந்தியா 2024 ஆம் ஆண்டில் ஈரானுடன் பத்து ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சாபஹார் துறைமுகமானது, பிராந்திய இணைப்பை ஆதரிப்பதோடு, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை ஆப்கானிஸ்தான் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.