உத்தரகாண்ட் மாநிலம் கார்பெட் புலிகள் காப்பகத்திற்கு அருகிலுள்ள மேற்கு தராய் வனப்பிரிவின் பாட்டோ சுற்றுலா மண்டலத்தில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை சாம்பல்நிற கழுகு ஆந்தை' ஜோடி காணப்பட்டது.
சாம்பல்நிற கழுகு ஆந்தை (Dusky Eagle Owls) ஸ்ட்ரிகிடே குடும்பத்தைச் சார்ந்தது.
இவை ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்களுக்கு அருகிலுள்ள அடர்ந்த, பழமையான காடுகளை விரும்புகின்றன.
இவற்றின் IUCN செந்நிறப் பட்டியலின் நிலை 'தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்' என்பதாகும்.
இந்த இனங்கள் காணப்படுவது, நிலையான இரைத்தளம் மற்றும் இடையூறு இல்லாத கூடு கட்டும் வாழ்விடங்களைக் கொண்ட ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பைக் குறிக்கிறது.