சாம்பார் ஏரியில் ஒரு புதிய ஆர்க்கியா (தொன்மை பாக்டீரியாக்கள்)
January 28 , 2020 1996 days 839 0
தேசிய நுண்ணுயிர் வள மையம் - தேசிய செல் அறிவியல் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் (National Centre for Microbial Resource — National Centre for Cell Science / NCMR - NCCS) ராஜஸ்தானில் உள்ள சாம்பார் உப்பு ஏரியில் ஒரு புதிய ஆர்க்கியாக்களை (தொன்மை பாக்டீரியாக்கள் - ஒரு வகையான நுண்ணுயிரிகளை) கண்டுபிடித்து உள்ளனர்.
ஆர்க்கியா (ஒற்றை ஆர்க்கியோன்) என்பது வெப்பமான நீரூற்றுகள், குளிர்ந்த பாலைவனங்கள் மற்றும் உயர் உப்புத் தன்மை கொண்ட ஏரிகள் போன்ற மிகக் கடுமையான வாழ்விடங்களில் செழித்து வளரும் நுண்ணுயிரிகளின் ஒரு பழமையான குழு ஆகும்.
இவை நுண்ணுயிர் எதிரி மூலக்கூறுகளை உருவாக்குவதற்காகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிவு நீர் சுத்திகரிப்புப் பயன்பாடுகளுடன் ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டிற்காகவும் அறியப் படுகின்றன.
சாம்பார் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய ஆர்க்கியாவிற்கு நாட்டில் நுண்ணுயிர்ப் பன்முகத்தன்மை ஆய்வுகளுக்கு மிகுந்த பங்களிப்பு அளித்ததற்காக உயிரி தொழில்நுட்பத் துறைச் செயலாளரான டாக்டர் ரேணு ஸ்வரூப்பின் பெயரால் “நட்ரியால்பா ஸ்வரூபியா” என்று பெயரிடப் பட்டுள்ளது.
NCMR – NCCS பற்றி
தேசிய நுண்ணுயிர் வள மையமானது நுண்ணுயிர் கலாச்சாரச் சேகரிப்பு மையமாக (Microbial Culture Collection - MCC) 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறையின் கீழ் வருகின்றது.
பாக்டீரியாவின் பன்முகத் தன்மையைப் பாதுகாத்து, அதனைப் பட்டியலிடுவதே இதன் பணியாகும்.