பழங்கால இந்துக் கோவிலான சாரதா பீடத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த இந்துப் புனிதப் பயணிகளை அனுமதிப்பதற்கான ஒரு பெருவழிப் பாதையை அமைக்கும் பரிந்துரைக்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.
சாரதா பீடம் ஆனது அசோகரது காலத்தில் கி.மு. 237-இல் கட்டப்பட்டது.
இந்தக் கோவிலானது கற்றலுக்கான இந்துக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழங்கால கற்றல் மையமாகும்.
6 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில், சாரதா பீடம் என்பது இந்தியத் துணைக் கண்டத்தின் முன்னணி கோவில் பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும்.
காஷ்மீரைச் சேர்ந்த பண்டிட்களின் மூன்று முக்கியமான புனிதத் தளங்களில் இதுவும் ஒன்றாகும். அனந்த நாகில் உள்ள மார்ட்டண்டு சூரியக் கோயில் மற்றும் அமர்நாத் கோயில் ஆகியவை இதர இரண்டு புனிதத் தளங்களாகும்.
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் உள்ள சாரதா பீடத்திற்கான பெருவழிப்பாதை திறக்கப்பட்டால் அது கர்தார்பூர் பெருவழிப் பாதைக்குப் பின்பு இரண்டு அண்டை நாடுகளையும் இணைக்கும் இரண்டாவது மதம் சார்ந்த பெருவழிப் பாதையாக இருக்கும்.